YL-friends organization

YL-friends organization yl rajni rathinam

நல்லவனுக்கு நல்லவன்,ஆனால் வல்லவன் ...
13/03/2017

நல்லவனுக்கு நல்லவன்,ஆனால் வல்லவன் ...

arasiyala aanmeegama  atha neenga mattum tha thalaiva mudivu pannanum
07/02/2017

arasiyala aanmeegama atha neenga mattum tha thalaiva mudivu pannanum

03/01/2017

என் வழி தனி வழி ரசிகன் பாடு தலைவலி – ஜெயாவின் வெற்றிடத்தை நிரப்ப அரசியலில் குதிக்கும் ரஜினி
செய்தியாளர்: சித்ரன் -January 3, 2017595
Share on Facebook Tweet on Twitter

சென்னை: ஜெயலலிதாவின் மறைவால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் மறைவு. மறு புறம் திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பது. இந்த அரசியல் வேற்ற்டத்தை நிரப்ப இப்போது தகுதியான தலைவர்கள் சிலர் இருந்தாலும் சினிமா என்ற ‘ஜிகினா’ பின்புலம் இல்லை. இந்த சூழலில் மீண்டும் ரஜினியை தமிழகத்தின் அரசியல் தலைமை ஏற்க ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் பேனர் என்று பட்டையை கிளப்பி வருகின்றனர். திருச்சி ரஜினி மன்ற பொறுப்பாளர் ராயல் ராஜ் ஒட்டியுள்ள போஸ்டரில் ‘தலைமை ஏற்க மக்கள் அழைக்கிறார்கள் – தொண்டர்கள் இருக்கிறோம்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தே 1996-ம் ஆண்டு ஜெயா ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். கருணாநிதியும் ஜெயித்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். விரைவில் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தலைவரைச் சந்திக்கப் போகிறோம். அப்போது அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்போம்,” என்றார் ராயல் ராஜ். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்து ஏமாந்த பல ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் பார்வையாளர்கள் கடைசியில் அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

நமது கப்ஸா நிருபரும் சிறுவயது முதலே சுமார் 25 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவார் வருவார் என்று நொந்து போய் கடைசியில் வேறு வேலை ஏதும் இல்லாமல் ‘உங்கள் நியூஸ்’ அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளார். ‘ஜெயலலிதாவின் இறப்பால் உண்டான வெற்றிடம் இருக்கட்டும் இன்னும் கருணாநிதி இருக்கிறாரே அவரை பற்றி பேசலாம் வாருங்கள்’ என்று ரஜினி போனில் அழைத்ததும், பரபரப்பு கிளப்ப சரியான தீனி கிடைத்தது என்று அடித்து பிடித்து கார்டன் விரைந்த கப்ஸா நிருபரிடம் ரஜினி கூறியதாவது: அரசியல் வெற்றிடத்தை நான் நிரப்பத்தயாராக இருக்கிறேன். மோடி எனது நண்பர், கருணாநிதி எனது வழிகாட்டி, எல்லோரும் கருணாநிதியின் பராசக்தி படம் பற்றி இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமாதிரி பாட்ஷா படம் பற்றி என்னுடைய ரசிகர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் தமிழிசை என்னை பாஜகவில் இணைய அழைப்பு விடுத்தார், ‘என் வழி தனி வழி ரசிகன் பாடு தலைவலி’ என்று கூறி ஒதுங்கிக் கொண்டேன். இப்போது பாஜக ஆதரவுடம் கருணாநிதியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

கடந்த 25 ஆண்டு காலமாக ஒவ்வொரு பட ரிலீசின்போதும் இதே யோசனை தான். இப்போது அரசியலுக்கு வரச்சொல்லி போஸ்டர் அடிக்கும் ரசிகர்கள் எந்திரன் 2 வந்தால் பாலபிசேகம் பண்ண பணத்துக்கு எங்கே போவார்கள் என் நினைத்தால் கவலையாக இருக்கிறது. நண்பர் கமல் சொன்னது போல் ‘நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு சொல்லலை, வந்தா நல்லா இருக்குமேன்னு தான் சொல்ல நினைக்கிறேன்’ என்று தெளிவாக குழப்ப நமது கப்ஸா நிருபர் எஸ்கேப் ஆனார்

02/01/2017

பாட்ஷா, கபாலியை மிஞ்சும் ரஜினியின் அடுத்த கேங்ஸ்டர் படம்!
ரஜினியின் கேரியில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். வசூல்ரீதியாக மட்டுமின்றி, ரஜினிக்கும், அவரது ரசிகர் களுக்கும் பெரிய திருப்தியை கொடுத்த படம். அதனால்தான் இப்போது வரை தான் நடித்த படங்களில் பிடித்த முதல் படமாக பாட்ஷாவை குறிப்பிட்டு வருகிறார் ரஜினி. மேலும், அந்த படம் பாணியில் அதன்பிறகு பாட்ஷா-2 படத்தை இயக்க சுரேஷ்கிருஷ்ணா தயாரானபோதும், ரஜினி அதற்கு உடன்படவில்லை. பாட்ஷா மாதிரியான இன்னொரு படம் கொடுப்பது அரிது என்று அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்து விட்டார்.இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப்பிறகு கபாலி என்ற கேங்ஸ்டர் கதையில் நடித்த ரஜினி மீண்டும், பா.ரஞ்சித் இயக்கத்தில் இன்னொரு படத்திலும் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
தற்போது ஷங்கரின் 2.ஓ படத்தின் இறுதிகட்டத்தில் இருப்பவர் விரைவில் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அப்படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.மேலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் பாட்ஷா, கபாலி படங்களின் இரண்டாம் பாகங்களாக இருக்கலாம் என்று செய்திகள் கசிந்து வரும் நிலையில், அதுகுறித்து டைரக்டர் ரஞ்சித் தரப்பில் விசாரித்தபோது, ரஜினியை அடுத்து இயக்கும் புதிய படமும் கேங்ஸ்டர் கதையில்தான் உருவாகிறது. 90 சதவிகிதம் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. அதற்கான லொகேசனை முதலில் பார்த்து விட்டு இப்போது ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் ரஞ்சித்.
முக்கியமாக, பாட்ஷா, கபாலி மாதிரி இல்லாமல் இன்னொரு புதுமாதிரியான கேங்ஸ்டர் கதையில் இந்த படம் தயாராகிறது. பாட்ஷா, கபாலி படங்களுக்கும் இந்த படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது. அதேசமயம், அந்த படங்களை மிஞ்சும் வகையில் அதிரடியான கேங்ஸ்டர் கதையில் இப்படம் தயாராகிறது என்கிறார்கள்.

2016 no1 song namma neruppuda song bloods
28/12/2016

2016 no1 song namma neruppuda song bloods

kabali da.....
26/12/2016

kabali da.....

10/12/2016
Bogan movie song stills
29/11/2016

Bogan movie song stills

19/11/2016

2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழாநேரலையாக யூடியூப்பில் ஒளிபரப்ப ஏற்பாடு

2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழாவுக்காக மும்பை புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லைகா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பாக வெளி வரவிருக்கும் 2.0 படத்துக்கு உலகெங்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில், முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் படத்துக்கு நிகராக 2.0 உருவாகி வருகிறது.

அதுமட்டுமல்ல, தமிழில் உருவாகி வரும் முழுமையான 3டி படமும் இதுதான். படப்பிடிப்பு முழுவதையும் 3 டி தொழில்நுட்பத்திலேயே உருவாக்கி வருகிறார் ஷங்கர். படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்த விழாவில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவர் வருவதை அறிந்து முன்கூட்டியே திரண்ட ரசிகர்கள் அவருக்கு கையசைத்து வழியனுப்பினர். விமானம் மூலம் மும்பை சென்ற ரஜினியை மும்பை ரசிகர்கள் வரவேற்றனர். நாள் மாலை 4 மணிக்குத் தொடங்கி, விழா முடியும் வரை நேரலையாக யூடியூப்பில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது லைகா நிறுவனம்

Address

Bodinayakkanur
625513

Telephone

7418170016

Website

Alerts

Be the first to know and let us send you an email when YL-friends organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to YL-friends organization:

Share