Mugundha dhamu

Mugundha dhamu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mugundha dhamu, Apparel & Clothing, Salem.

09/08/2023
03/01/2023
30/12/2022
11/12/2022
17/11/2022
Mugundha dhamu
15/11/2022

Mugundha dhamu

நம்முடைய வேதங்களில் வஸ்திரத்தை குறித்து மிக மிக விசேஷமாக கூறப்பட்டுள்ளது.....

கரையில்லாத வஸ்திரத்தை அணியக்கூடாது. கரையுள்ள வஸ்திரத்தை மட்டுமே அணிய வேண்டும். ஸ்நானம் செய்து முடித்தவுடன் நாம் கட்டியிருக்கும் வஸ்திரத்தை கீழே போட்ட பிறகு அதை கால்களால் எடுக்கவோ மிதிக்கவோ கூடாது.

ஏனென்றால் தேவதைகள் அனைவரும் வஸ்திரத்தில் குடியிருப்பார்கள். வேதத்தில் வஸ்திரத்தை செய்யும் முறை, வஸ்திரத்தில் தேவதைகள் எப்படி குடி புகுவார்கள் என்பதை பற்றியெல்லாம் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் தான் வஸ்திரம் மிகவும் மகத்தானது. கரையுள்ள வஸ்திரத்தை யாருக்கேனும் அளித்தால் அவர்கள் பல தலைமுறைகள் நீடூடி காலம் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதற்கு சமம்.

அதே போல் யார் கொடுத்தாரோ அவரும் பல தலைமுறைகள் நீடூடி வாழ வேண்டும் என்று ஸங்கல்பம் ஆகும். இதனால் தான் வஸ்திரத்தை தரும் பொழுது கரையில்லா வஸ்திரத்தை தரமாட்டார்கள். கரையுள்ளவையே தருவார்கள்.

"சர்வம் சிவமயம் ஜகத்" (நெசவு) துணி நெய்யும் நெசவுக் கலையின் மூலமாகவும்; நெசவாளிகள் மூலமாகவும் நாம் பல தத்துவ விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். ஆணிலும் பெண்மை உண்டு; பெண்ணிலும் ஆண்மை உண்டு. முன்பே அதனை கூறியது அறிவியல் அல்ல. முன்பே ஆன்மீகம் கூறிவிட்டது.

(அர்த்த நாரீஸ்வரர் வடிவம் அதுதான்) வேட்டியோ புடவையோ; அவை இரண்டுக்குமே குறுக்கு நெடுக்கில்; குட்டையான குறுக்கிழையும் உண்டு. நீண்ட நெடுக்கிழையும் உண்டு. இதனை நேரிழை என்பர். நேரிழை என்றால் பெண் என்று பொருள். (நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்; சீச்சீ இவையும் சிலவோ விளையாடி...) மாணிக்க வாசகர்.

(திருவெம்பாவையில்) ஆடையில் ஓடும் நீண்ட நூலிழை பெண். அதில் குறுக்கே ஓடும் குட்டை நூலிழை ஆண். உலகியல் வாழ்வில் பெண்ணே அதிக பங்கு வகிப்பவள் என்பதை இது காட்டுகிறது. அதனால்தான் இல்லற வாழ்வில் அனைத்து செயல்களிலும் பெண்ணுக்கே முன்னுரிமை தருகிறார்கள்.("Ladies first") என்ற சுலோகத்தை ஆங்கிலேயன் நம்மை காப்பி அடித்து பின்னால் சொன்னான். முதலில் அதை நாம்தான் சொன்னோம்.

அப்படியானால்,
ஆணையும் பெண்ணையும் சேர்த்து நெசவு நெய்ததுதான் இல்லற வாழ்க்கையா?ஆமாம் அதுதான் உண்மை!. அதை கூறுவதே இந்த வேஷ்டி புடவை முதலான ஆடைகள். அதனால்தான் விழாக்களில் ஒருவருக்கொருவர் வேட்டி வைத்து தருவது.

புடவை வைத்து தருவது. குறைந்த பட்சம் ஓர் ரவிக்கை பிட்டாவது வைத்து தருவது எல்லாம் வந்தது) ஆம், உலகில் நெருக்கமாய் பின்னிப்பிணைந்த முதல் இண்டர் நெட் வலைத்தள சேவையே இந்த புடவை வேட்டிதான்.

அதனால்தான் பூர்வ அபர கிரியைகள் எல்லாவற்றிலுமே இந்த துணி என்ற பொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் மிக அதிகமாய் உள்ளது. தானங்களில் வஸ்த்ர தானமும் இதனால்தான் வந்தது...

- சித்தர்களின் குரல் shiva shangar

13/11/2022

முன்னாள் ஸ்வதந்த்ரா கட்சியின் முன்னாள் எம்.பி. திரு சிவப்ரகாசம் சந்திப்பு
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ முதாலம்மன் கோவில், முக்கூடல், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி. இந்த கோவில் இந்து நாடார்கள் சமூகத்தினவரால் 1894l கட்டப்பட்டது. இன்றுவரை இந்த கோவில், அந்த ஊரில் உள்ள இந்து நாடார்களுடைய குலதெய்வ கோவிலாக இருக்கின்றது. கோவிலுக்கு சொத்து ஏதும் இல்லை. 1976ல் இந்து சமய அறநிலையத்துறை, இந்த கோவிலுக்கு ஒரு தக்காரை நியமனம் செய்தது. கோவிலுக்கு சொத்தில்லை, வருமானமில்லை, பின்பு எந்த காரணத்தால் தக்கார் நியமனம் செய்யப்பட்டார் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்.

அன்றிலிருந்து இன்றுவரை, இந்த ஊரைச் சார்ந்த இந்து நாடார் சமூகத்தினருக்கு இந்த தகுதியில்லாத தக்கார் துன்பத்தை இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

வருடா வருடம் திருவிழாவின் பொழுது, ஊர் மக்கள் ஒன்று கூடி உபயம் செய்து திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு வருடமும், நம் நாட்டில், நம் தமிழகத்தில், இவர்கள் கட்டிய இவர்களுடைய கோவிலுக்கு அந்த தகுதியில்லாத தக்காரிடம் "அனுமதி" வாங்க வேண்டுமாம். ஜிசியா வரியை விட மோசமான நிலை இன்று அங்கு நிலவுகிறது.

கோவிலில் இருக்கும் உண்டியலில் வரும் பணத்தை அவ்வப்போது சட்ட விரோதமாக இந்த தகுதியில்லாத தக்கார் எடுத்துக் கொண்டு போகிறானாம். எல்லா கோவில்களில் நடக்கும் கூத்துதான். இந்த பணம் எங்கு போகின்றது என்று யாருக்கும் தெரியவில்லை. கோவிலுக்கு விளக்கு ஏற்ற எண்ணைக்கு கூட 5 பைசா இந்த தகுதியில்லாத தக்கார் கொடுப்பதில்லை.

இந்த கோவிலை குறித்து என்னிடம் ஆலோசனை பெற இந்த ஊரைச் சார்ந்த முன்னாள் ஸ்வதந்த்ரா கட்சி எம்.பி. திரு சிவபிரகாசம் அவர்கள் தலலைமை ஒரு குழு என் இல்லத்திற்கு வந்திருந்தர்.

இந்த கோவிலின் நலனிற்கு என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். சட்ட ரீதியாக எனக்கு தெரிந்த விவரங்களை இந்த கோவில் பக்தர்களுக்கு என்னாளும் கொடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறேன்.

"நிர்வாக திட்டம்" ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்து அதை எதிர்த்து இவர்கள் உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்திருக்கின்றனர். இப்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும் அறங்காவலர் நியமன வழக்கில், நிர்வாக திட்டம் போடப்பட்டு, தடையில் இருக்கும் கோவில்கள் எவ்வளவு என்கிற விவரத்தை இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். அப்படி எத்தனை ஆண்டுகள் இருக்கின்றன? அந்த கோவிலை எதற்கு இந்து சமய அறநிலையத்துறை நோடிபை செய்தது என்ற விவரங்களையும் இந்த துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இது போல எத்தனை கோவில்கள் உள்ளனவோ தெரியவில்லை. உங்கள் ஊரில் இது போன்ற கோவில் இருந்தால் [email protected] என்கிற மின்னஞ்சலுக்கு பின்வரும் விவரங்களை அனுப்பவும்.

1) கோவில் பெயர், தெய்வங்களின் பெயர், திருவிழா விவரங்கள்
2) விலாசம்
3) எந்த வருடம் இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலுக்குள் நுழைந்தது
4) இந்த கோவிலில் எந்த வருடம் "நிர்வாக திட்டம்" போடப்பட்டது
5) நிர்வாக திட்டத்தின்படி கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா?
6) நிர்வாக திட்டத்தை எதிர்த்து ஏதாவது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதா?
7) வழக்கு எண் மற்றும் விவரங்கள்? நீதிமன்ற ஆணைகள்
8) நிர்வாக திட்டத்திற்கு தடை பெறப்பட்டிருந்தால் அந்த நீதிமன்ற ஆணை விவரங்கள்
9) கோவிலில் தக்கார் என்று தகுதியற்றவர் இருந்தால் அவர் விவரம், பெயர், பதவி, எத்தனை காலமாக இருக்கிறார்?
10) கோவில் உண்டியல் பணம் எண்ணப்பட்டு கோவில் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா?
11) கோவிலுக்கு அசையா சொத்துக்கள் உள்ளனவா? இருந்தால் விவரங்கள்
12) கோவிலில் திருவிழாக்கள் நடக்கின்றன்வா?
13) கோவிலின் அர்ச்சகர் பூசாரி எந்த சமூகத்தை சேர்ந்தவர்.
14) வேறு ஏதேனும் தெரிவிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளிக்கவும். வள வள என்று எழுதினால் படிக்க நேரமிருக்காது. சுருக்கமாக எழுதினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க உதவும்.

ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

Address

Salem
636502

Telephone

+919942275558

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mugundha dhamu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mugundha dhamu:

Share