Janarthan Textile, Sholinghur

Janarthan Textile, Sholinghur Joyful Shopping
Janarthan Shopping

திருமணத் தடை நீக்கும் 13 ஆவது பரிகார ஆலயம் திருநந்தீஸ்வரர் கோயில், மணவூர் / Manavur, Tiruvallur District, Tamil Nadu. மூ...
02/06/2025

திருமணத் தடை நீக்கும் 13 ஆவது பரிகார ஆலயம்

திருநந்தீஸ்வரர் கோயில், மணவூர் / Manavur, Tiruvallur District, Tamil Nadu.
மூலவர்: ஸ்ரீ நந்தீஸ்வரர்
துணைவியார் : ஸ்ரீ ஆனந்தவல்லி.

உள் பிரஹார சன்னதியில் அம்பாள், விநாயகர், அஷ்ட லட்சுமி, சண்டிகேஸ்வரர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், நடராஜர் சபா, பைரவர்.
வெளிப் பிரகாரத்தில் முக்கன் விநாயகர், பிரகதீஸ்வரர், நாகர்கள் சன்னதி.தெற்குப் பக்கத்தில் சிவன் மற்றும் பார்வதியின் திருமணக் கோலத்துடன் ஸ்டக்கோ படங்கள் உள்ளன.ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் வழிபட்டு வந்த 45 நாட்களில் திருமணம் நடைபெறும் வரம் அருளும் ஆலயம் ஆகும்.

1. #கன்னிகாதானம்" என்றால் என்ன?2. #திருமணம் முடிந்த பின் ஏன்  #பாலும்,  #பழமும்  #கொடுக்கறாங்க_தெரியுமா? 🌺🌺 பிரம்மிப்பூட...
26/05/2025

1. #கன்னிகாதானம்" என்றால் என்ன?
2. #திருமணம் முடிந்த பின் ஏன் #பாலும், #பழமும் #கொடுக்கறாங்க_தெரியுமா? 🌺🌺

பிரம்மிப்பூட்டும் இரகசியம். வயிற்றுப் பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.
ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண.என்று அந்த மந்திரம் நீள்கிறது.
அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு 🙏🙏தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.
ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது. என்றால்பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது...

மகளை பெற்ற என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்🙏🙏
திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா? பிரம்மிப்பூட்டும் இரகசியம்.

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும். உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல்

"இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்"அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள். திருமணத்தில். ......🌺🌺🌺🌺🌺🌺

உலக அதிசயமாக இருக்கின்றன. ஒரு மணி நேரத்துக்கு அப்போதெல்லாம்  50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும். அதிலும் சின்ன சைக்...
03/02/2025

உலக அதிசயமாக இருக்கின்றன.

ஒரு மணி நேரத்துக்கு அப்போதெல்லாம் 50 காசு அல்லது ஒரு ரூபாய் என்றிருக்கும்.
அதிலும் சின்ன சைக்கிள் கூட உண்டு.

கேரியர் வைத்த சைக்கிள்,
கேரியர்இல்லாத சைக்கிள்,
டைனமோ வைத்த சைக்கிள் என்று வாடகைக்கு விடுவார்கள்.

‘நோட்ல பேரும் டைமும் எழுதிக்கிட்டு எடுத்துட்டுப் போ..’ என்று விசிறிக்கொண்டே,
தாத்தாவோ பாட்டியம்மாவோ சொல்லுவார்கள்.

உடனே வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பலரும்
10.20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10.30 என்று எழுதுவார்கள்.
அந்த ஒரு பத்து நிமிஷம்,
இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்கிற ஆசையின் வெளிப்பாடுதான் அது..!

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமரலாஜிப்படி அந்த எண் கொண்ட சைக்கிளை எடுப்பார்கள்.

’ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா..’ என்று சொன்னால், அந்த சைக்கிள் வரும்வரைக்கும் காத்திருப்பார்கள்.

இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.

சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு,
தெரிந்தவரிடம் அல்லது நண்பரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வார்கள்.

பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை விடவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களும் உண்டு.
பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பார்கள்.

இப்போது எதற்கெடுத்தாலும் பைக்கை எடுக்கிறோம்.
கறிவேப்பிலை வாங்கவே,
டூவீலரை எடுத்துக் கொண்டு தான் செல்கிறோம்.

அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு,
கெத்துக் காட்டுவோம்.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், இரண்டு அல்லது மூன்று டூவீலர்கள் இருக்கின்றன.
அப்பாவுக்கு பைக்,
மனைவிக்கு ஆக்டீவா,
மகளுக்கு ஸ்கூட்டி என்று நிற்கின்றன.

சைக்கிளுக்கும் நமக்குமான பந்தம்... பால்யத்தில் இருந்தே இரண்டறக் கலந்தது.
எத்தனை ராயல் என்பீல்டுகளும் யமஹாக்களும் இருந்தாலும்,
நமக்கும் நம் உடலுக்கும் எனர்ஜியையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை, மறக்கமுடியுமா..?

உங்கள் நினைவுகளை கொஞ்சம் தட்டி விடுங்கள்..

யார் முட்டாள்?சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை...
23/01/2025

யார் முட்டாள்?
சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள். அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா...

இனியாவது விழிப்போம்.
நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.

31/12/2024
கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் , மனைவி இருவரையும் ...
30/12/2024

கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் , மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்... இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.

கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்.. குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன... எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார்.. உடனே தேவகியின் கணவன் வசுதேவன் 'தயவு செய்து கத்தி விடாதே' என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான். கழுதையும் கத்தவில்லை.. கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது. எனவேதான் 'காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி' என்ற பழமொழி வந்தது..

கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது....

16/11/2024

வணக்கம்.
ஸ்ரீ யோகந்ருஸிம்மர் ஸ்ரீ குரோதி கார்த்திகை மாதம் முதல் நாள்(16.11.2024) சனிக்கிழமை முதல் கார்த்திகை மாதம் முழுவதும் யோக நித்திரை கலைந்து கண் திறந்து பக்தர்களை ரக்ஷிப்பார். திருக்கடிகை அக்காரக்கனியை சேவித்து அவர் அனுகிரஹம் பெறுவீர்!

 #இறைவனுக்கு_கொடுப்பது_எப்படிபண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வா...
09/11/2024

#இறைவனுக்கு_கொடுப்பது_எப்படி

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து,
"இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா...." என்றார்.

வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.
அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,
"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது...." என்றார்.

திடுக்கிட்ட பண்ணையார்,
"இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்..." என்றார்
இறைவன், "இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது..." என்றார்.

விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து,
"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா....." என்றார்.
அவன் "ஆம்" என்றான்.
பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார்.
"உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்..." எனறார்.

அவன், "உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன், மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.." என்றான்.

பண்ணையாருக்குப் புரிந்து விட்டது.
ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை.....
கோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது ஏழைகளுக்குப் போய்ச் சேராது.
ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்......
கோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம்.
ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி, இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்......
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்...

குறிப்பு : கோவில்களும் கிடைப்பவற்றில் ஏழைகளுக்கு கொடுத்தால் இறைவனுக்கு போய் சேரும்.

Address

Sholinghur

Opening Hours

Monday 8am - 9:30pm
Tuesday 8am - 9:30pm
Wednesday 8am - 9:30pm
Thursday 8am - 9:30pm
Friday 8am - 9:30pm
Saturday 8am - 9:30pm
Sunday 8am - 9:30pm

Telephone

+19894997876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janarthan Textile, Sholinghur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share