Prahalyas Collections-Designer Boutique

Prahalyas Collections-Designer Boutique Indian clothing for women is something that allures almost everyone’s attention. Traditional Indian Saree's & Salwar that is worn by Indian Note:
1.

Traditional Indian Saree's & Salwar that is worn by Indian women is considered serene to be one of the most elegant and beautiful dresses in the world. Indian clothing or dresses represents its culture and tradition. Prahalyas collections is an online market for Women Clothing, You can view the pictures on Facebook and place an order or ask queries about the product by sending a mail to fashcherry

[email protected] !! We take wholesale orders for complete catalogs only! We accept online orders through Facebook and provide delivery with in India. To place an order
Comment below the Photo or leave a message in our Facebook inbox or send us a mail at [email protected] with the album name and the specific code. Mention your complete mailing address and a phone number. We will send you our bank account details once its confirmed. Payment can be made by online money transfer. The shipping of the product will be done after the receipt of payment,

Time to Ship based on the availability of product. In general, it is 1-2 weeks. There might be slight color and print variation possible.
2. Any manufacturing defect should be reported within 24 hours of receipt of the goods. Only exchange is allowed.
3. You will have to pay the shipping/courier charges extra

With PT Prime – I just got recognized as one of their rising fans! 🎉
18/10/2024

With PT Prime – I just got recognized as one of their rising fans! 🎉

[10/7, 18:56] Chels: https://youtube.com/shorts/Virzfkw-Q6U?si=LsT-jMcRw2H4Lb6z[10/7, 18:56] Chels: https://youtube.com/...
07/10/2024

[10/7, 18:56] Chels: https://youtube.com/shorts/Virzfkw-Q6U?si=LsT-jMcRw2H4Lb6z
[10/7, 18:56] Chels: https://youtube.com/shorts/yS8KEVz41qo?si=OLdm5a7-IHhXi5dJ
[10/7, 18:56] Chels: https://youtube.com/shorts/rqPWZgkqFQ8?si=FBzIF9-9ly0HyIlP
[10/7, 18:56] Chels: https://youtube.com/shorts/Imy-ZSMeDMY?si=c-pElfnVpTjFJH5b
[10/7, 19:00] Chels: *See Subscribe share in status ,instagram, facebook, etc...dears*👆👆👆👆👆

*ஒரு வரி மலர் மருத்துவம் உலகம் எங்கும் பரப்புவோம் subscribe செய்யுங்கள் மற்றும் 1008 கோடி பேருக்கு கொண்டு சேர்ப்போம் ஸ்டேட்டஸ் நட்புகள் உறவுகள் குரூப்பிற்கு பகிர்வோம் லிங்க் பகிரும் இடங்களிலும் பகிர்வோம் ஃபேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் அனைத்திலும் பகிர்ந்து மலர் மருத்துவம் உலகம் எங்கும் பரப்புவோம் இந்த நட்சத்திர பிறந்தநாளில் அடியேனின் அன்பு வேண்டுகோள் அனைவருக்கும் அன்புடன் செல்ஸ்*👆👆👆👆👆🙏🙏🙏🤩🤩🤩😍🥰🥰🥰🥰🥰

11/09/2024

11-9-2024
*ஸ்ரீ ராதாஷ்டமி - சிறப்புகள்*

*ராதாராணியின் அவதாரத் திருநாள்*

ஆவணி சுக்ல பட்ச அஷ்டமி

ராதாஷ்டமி என்றால் ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாளாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள் கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திரு நாள் ஸ்ரீராதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமயமான அந்தரங்க சக்தியும், மிக மிகச் சிறந்த தூய பக்தையும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லக்ஷ்மி தேவியின் மூலம் ஆவார்.

*ராதாராணி அவதார மகிமை*

ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார்.

அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக பார்வதிதேவி பிறந்தார். பிறகு பார்வதிதேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தேவாதி தேவர்களும், முனிவர்களும் பங்கேற்றனர்.

இவர்களுடன் விந்தியமலையும் வந்திருந்தது. கோலாகலமாக நடந்தவிழாவை கண்ணுற்ற விந்தியமலை மிகவும் ஆச்சர்யப்பட்டது. அத்துடன் மிகவும் போற்றுதற்குரிய சிவபெருமானே, இமயமலையின் மருமகனாக வந்திருக்கிறார் என்றும் வியந்தது.

உடனே தனக்கும் அது போல் சிறந்த ஒரு மகாபுருஷர், மருமகனாக வர வேண்டும் என்று விந்தியமலை ஆசைப்பட்டது.
இந்த ஆசை நிறைவேற பிரம்மதேவரை வேண்டி, 1000 வருடங்கள் கடுமையான தவம் புரிந்தது விந்தியமலை.

இந்த தவத்தினால் திருப்தி அடைந்த பிரம்மதேவர், முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரே, உனது மருமகனாக வருவார் என்று வரமளித்தார். அதன் பிறகு விந்தியமலைக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

இதை கொண்டாட பெரியவிழா ஒன்று நடந்தது. இதில் இமயமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே தருணத்தில், கிருஷ்ணரும் மதுராவில் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது கம்சனின் ஆணையின் பேரில், பிள்ளைக் கொல்லி அரக்கி பூதனா பிறந்த குழந்தைகளை எல்லாம், கொன்று கொண்டிருந்தாள்.

எனவே விந்திய மலைக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்ததும், அங்கும் இந்த பூதனா விரைந்தாள். விந்திய மலையின் இரண்டு அழகான பெண் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தாள்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முனிவர்கள் பலர், சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி, பூதனாவை தடுத்தனர். மந்திரத்தின் சக்தியால், பூதனாவின் உடல் நெருப்பு போன்று எரிந்தது. நேரம் செல்ல, செல்ல எரிச்சல் தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் பூதனா கீழே போட்டு விட்டாள்.

அதில் ஒரு குழந்தை விருஷபானு மன்னரின் தோட்டத்தின் அருகே யமுனை நதியில் ஒரு தங்கத் தாமரையில் விழுந்தது. அவர்தான் ஸ்ரீமதி ராதாராணி. பொன்னிறத்தில் அவதரித்தவர், மற்றொரு குழந்தை விருஷபானுவின் சகோதரர் சந்திர பானுவின் தோட்டத்தில் விழுந்தது. இவர் சந்திராவளி ஆவார்

*யமுனை நதியில், தாமரை மலரில் அவதரித்தார்*

யமுனை நதியில், தாமரை மலரில் தங்க ஒளி வீசுவது போன்று பிரகாசமான குழந்தை மிதந்து வருவதை கண்டார் மன்னர் விருஷபானு . அப்போது வானத்தில் தோன்றிய பிரம்மதேவர், மன்னர் விருஷபான வே! நீ தரிசிக்கும் இந்த குழந்தை. சாதாரண குழந்தை அல்ல.
லெஷ்மி தேவியின் மூலம் ஆவார். மிகக் கவனமாக இக்குழந்தையை வளர்த்து வா. நீயும் உனது மனைவி கீர்த்திதாவும் முந்தைய பிறவியில் பகவானே உங்களது மருமகனாக வர வேண்டும் என்று தவம் செய்தீர்கள். அதன் பலனாக இந்த தெய்வீக குழந்தையை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்.

பிறகு அக்குழந்தையை, மன்னர் விருஷபானு தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பெளர்ணமி நிலவு போன்று பொன்னிறத்தில் பிரகாசித்த குழந்தையின் பேரழகை பார்த்தவுடன் ராணி கீர்த்திதா மிகவும் மகிழ்வுற்றாள்.

இப்படியாக ஸ்ரீமதி ராதாராணி, மன்னர் விருஷபானுவுக்கும், தாய் கீர்த்திதாவிற்கும் தெய்வப் புதல்வியாக அவதரித்தார். ராதாராணி பிறந்த பிறகு, யாரையும் பார்க்கவில்லை. அவரது தெய்வீக கண்கள் திறக்கவே இல்லை. திருவாய் மலர்ந்து பேசவும் இல்லை.

இதனால் விருஷபானுவும், கீர்த்திதாவும் மிகவும் வருத்தப்பட்டனர். இந்நிலையில் மன்னரின் இல்லத்திற்கு மகாரிஷி நாரதர் வந்தார்.அவரை வணங்கி வரவேற்ற மன்னர், தனது கவலையை தெரிவித்தார்.

அதற்கு நாரதர், “கவலைப்பட வேண்டாம். இந்த தெய்வீக குழந்தையின் பிறப்பிற்கு ஒரு விழா நடத்துங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று ஆசீர்வதித்தார்.

பிறகு மன்னர், ராதாராணி பிறந்த விழாவை மிகவும் விமரிசையுடன் கொண்டாட தனது நண்பர்கள், உறவினர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பில் அவரது நெருங்கிய நண்பரும், கிருஷ்ணரின் தந்தையுமான நந்தமகாராஜாவும் அழைக்கப்பட்டிருந்தார்.

அழைப்பை ஏற்ற நந்தமகாராஜா குழந்தைகள் கிருஷ்ண பலராமருடனும் விழாவிற்கு சென்றார். உடன் கிருஷ்ணரின் தாய் யசோதை, பலராமரின் தாய் ரோஹிணி உட்பட விரஜவாசிகள் பலரும் சென்றனர்.

*கிருஷ்ணரே முதல் தரிசனம்*

விழாவில் ஒருவரையொருவர் பரஸ்பரம் விசாரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பசும் பால், சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இனிப்பு வகை பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

அப்போது தான் அது நடந்தது. சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து தவழ்ந்து, ராதாராணியின் தொட்டில் அருகே சென்றார். கிருஷ்ணர் தன் முன் வந்ததும், ராதாராணி உடனே தன் கண்களை திறந்தார்.

முதன்முதலாக கிருஷ்ணரை தரிசித்து, மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். அவரது பார்வையும், மகிழ்ச்சி சிரிப்பும் குழுமியிருந்த அனைவரையும் ஆரவாரப்படுத்தின.

கிருஷ்ணர் மீது ஸ்ரீமதி ராதாராணி கொண்டிருந்த அளப்பெரும் அன்பினாலும், தூய பக்தியினாலும் கிருஷ்ணரைத் தவிர, வேறு யாரையும் முதலில் தரிசிக்கக் கூடாது என்று ராதாராணி உறுதி எடுத்திருந்தார்.

எனவே இந்த தெய்வீக திருவிளையாடல் நடந்தேறியது. அத்துடன் கிருஷ்ணர் தன் பிஞ்சுகரங்களில் வைத்திருந்த புல்லாங்குழல், ராதாராணியின் புன்சிரிப்பில் வசீகரிக்கப்பட்டு ராதாராணியின் மேல் நழுவி விழுந்தது.

இப்படியாக கிருஷ்ணரும், தன் அன்பை ராதாராணிக்கு தெரிவித்தார். இந்த தெய்வீக வைபவத்தை கண்ணுற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கிருஷ்ணரையும், ராதாராணியையும் போற்றி துதித்தனர்.

குறிப்பாக ராதாராணியின் தந்தையான மன்னர் விருஷபானுவும், தாய் கீர்த்திதாவும் பெருமகிழ்ச்சி அடைந்து மேலும் விழாவை சிறப்புற நடத்தினர்.

*கிருஷ்ணரின் சேவையில் ராதாராணியே முதலிடம்*

கிருஷ்ணருக்கு சேவை செய்வதில், ஸ்ரீமதி ராதாராணிக்கு இணையாக வேறு யாரையும் கூற இயலாது. ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ணர் மீது செலுத்திய பக்தி எத்தகையது என்பதை அறிவதற்காக தான், கிருஷ்ணரே, சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார் என்று சைதன்ய சரிதாம்ருதம் குறிப்பிடுகிறது.

அந்த அளவிற்கு ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணர் மீது அன்பும் பக்தியும் செலுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான வருடங்கள் தவங்கள் செய்தாலும் கிருஷ்ணர் ராதாராணியின் தெய்வீக அன்பை புரிந்து கொள்ள இயலாது. தூய பக்தர் ஒருவரின் கருணையால் மட்டுமே ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணரின் புகழை உணர இயலும்.

*ராதாராணியின் திருவருள் அவசியம்*

ஒருவர் கிருஷ்ணரின் கருணையை பெறுவதற்கு, ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.
யார் ஒருவர் கிருஷ்ணருக்கும், கிருஷ்ண பக்தர்களுக்கும் சேவை செய்கிறாரோ அவர் ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

*ஸ்ரீராதாஷ்டமி திருநாளின் விசேஷம் என்னவென்றால்*

“ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம்” விசேஷம் ஆகும். பொதுவாக ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணர் கோயில்களில் வருடத்தின் எல்லா நாட்களிலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்கள் மட்டுமே தரிசிக்கும் வகையில் இருக்கும்.

ஆனால் ஸ்ரீராதாஷ்டமி அன்று ஒருநாள் மட்டும் ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாதங்களை தரிசிக்க முடியும். எனவே ஏராளமான பக்தர்கள் இத்திருநாளில் விரதம் இருந்து திருப்பாத தரிசனம் பெறுவர்.

*ஸ்ரீராதாஷ்டமி அன்று செய்ய வேண்டியது*

அன்று மதியம் வரை விரதம் இருக்க வேண்டும். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகபட்சம் உச்சரிக்க வேண்டும். ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம் செய்ய வேண்டும்.

*ராதாராணியின் வசீகரம்*

மன்மதனின் அழகு அளவிட முடியாததாகக் கூறப்படுகிறது. அனைவரையும் வசீகரிக்கும் தன்மை மன்மதனுக்கு உண்டு. அவனை வென்றவர்கள் மிகவும் அரிது.

இப்படிப்பட்ட கோடி மன்மதர்களை வசீகரிக்கும் தன்மை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உண்டு. ஆகையால் தான் பகவான் கிருஷ்ணர் ’மதனமோஹனர் (மன்மதனையும் மயக்கக் கூடியவர்) என்று அழைக்கப் படுகிறார்.

ஆனால் அந்த மதனமோஹனரையே வசீகரிப்பவள்தான் ராதாராணி. ஆகவே, ராதாராணி ‘மதன மோஹன மோஹினி’ என்று அழைக்கப்படுகிறாள்.

*ஸ்ரீமதி ராதாராணியின் கருணை*

ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும் துளியும் கர்வம் இல்லாதவள்.

விருந்தாவனத்தில் கோபியர்கள் கிருஷ்ணருடன் லீலைகளைப் புரிவதற்கான சந்தர்ப்பத்தை ராதாராணியே ஏற்படுத்திக் கொடுப்பாள். இதர கோபியர்கள், கிருஷ்ணருடன் மாதுர்ய பாவத்தைப் (தெய்வீக காதல் உணர்வுகளைப்) பகிர்ந்து கொள்ளும்போது, தான் கிருஷ்ணருடன் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியடைவாள் ஸ்ரீமதி ராதாராணி.

அவ்வளவு கருணை உடையவள் ராதாராணி, நாம் ராதாராணியின் அருளைப் பெற்றோமானால், கிருஷ்ணரின் அருள் தானாகவே கிடைக்கும். இதனால் கிருஷ்ணரை விட்டுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணரை விட்டுவிட்டால் ராதை தனது கருணையை நமக்கு வழங்க மாட்டாள்.

*ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் ராதாராணி*

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும் போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீலபிரபுபாதர் விளக்குகிறார்.

நாம் இந்த மஹா மந்திரத்தை பகவத் சிந்தனையுடன் வாயினால் உச்சரித்து காதால் நன்கு கேட்க வேண்டும். ‘ஹரே’ என்று சொல்லும்போது அச்சொல்லின் அலைகள் பரவ, ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் உச்சரிக்கப்படுவதை எண்ணி பகவான் கிருஷ்ணர் மகிழ்கிறார்.

அதே சமயம் ‘கிருஷ்ண’ என்று சொல்லும் போது, பகவான் கிருஷ்ணரின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு ராதாராணி மகிழ்ச்சியடைகிறாள். இந்த உணர்வை மனத்தில் நிறுத்தி நாம் ஜெபம் செய்ய வேண்டும். ராதாராணியானவள் நம்மீது கருணை வைத்து விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்வாளேயானால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைக் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்.

*விருந்தாவனமும், ராதாராணியும்*

தப்த காஞ்சன கௌராங்கி
ராதே வ்ருந்தாவனேஸ்வரி
வ்ருஷபானு ஸுதேதேவி
ப்ரணமாமி ஹரி-ப்ரியே

“பொன்னிற மேனியுடையவரும், விருஷபானு மஹாராஜாவின் புதல்வியுமான ராதாராணியே, விருந்தாவனத்தின் ஈஸ்வரியே, உம்மை நான் வணங்குகின்றேன்.”

ராதாராணி, விருந்தாவனத்தின் ஈஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். விருந்தாவனத்தில் ராதாராணிக்கு சிறப்பான மதிப்பு உண்டு. எல்லா உலகையும் கட்டுப்படுத்தும் கிருஷ்ணரின்இல்லத்தை (விருந்தாவனத்தை) ஸ்ரீமதி ராதாராணி கட்டுப்படுத்துகிறாள்.

விருந்தாவனத்தில் கிருஷ்ணரைக் காட்டிலும் ராதைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விருந்தாவனத்தின் சுவர்களிலெல்லாம் ‘ராதே’ என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். விருந்தாவனத்தில் ரிக்ஷா ஓட்டுபவர்கள் ‘நகருங்கள்’ என்று சொல்வதற்கு பதில் ‘ராதே, ராதே’ என்றுதான் சொல்வார்கள்.

விருந்தாவனத்திலுள்ள ராதாகுண்டத்திற்கும் தனிமதிப்பு உண்டு. ராதாகுண்டத்தின் மீதுள்ள பெரும் மதிப்பினால், பொதுவாக இஸ்கான் பக்தர்கள் அதில் நீராடுவதில்லை. ராதாகுண்டத்தின் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டாலே ராதாதேவியின் கருணை நமக்குக் கிடைக்கும்.

நன்றி 🙏

04/09/2024

*🌙 மூன்றாம் பிறை தெரிகிறதா🌘🌘🌘 போட்டோ எடுத்து அனுப்புங்கள்*

30/08/2024
.    *உங்கள் வாழ்க்கையில் வரும் விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நினைப்பதை நிறுத்துங்கள்...!!* ...
29/08/2024

.

*உங்கள் வாழ்க்கையில் வரும் விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நினைப்பதை நிறுத்துங்கள்...!!*

*சில விஷயங்கள் தோல்விகளை கொடுக்கும் சில பாடங்களை கொடுக்கும் சில வருத்தங்களை கொடுக்கும் சில போராட்டங்களை கொடுக்கும்..!!*

*அனைத்தும் கலந்ததே வாழ்க்கை..!!*

*இனிய ஏகாதசி திருவாதிரை காலை வணக்கம்.*

🌹🌹

14/08/2024

*🙏🌹நினைவூட்டும் பதிவு*🌹🙏

*🌹விஷ்ணுபதி புண்ய காலம் என்றால் என்ன?*🌹

சூரிய பகவான் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிகளில் பிரவேசிக்கும் முதல் நாள் *விஷ்ணுபதி புண்ய காலம்* என்று அழைக்கப்படும்.

மங்களகரமான குரோதி வருடம் - 16.08.2024 அன்றே, மாலை 7.44 pm மணிக்கு சூரிய பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். (தன் சொந்த இடத்திற்கு பெயருகிறார்)(*@பெயர்ச்சி நேரம் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையை மையமாக வைத்து ஸ்ரீனிவாசன் திருக்கணித பஞ்சாங்கத்தை வைத்து கணிக்கப்பட்டது*)

இது ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் 4 நாட்கள் மட்டுமே வரும் தனித்தன்மை வாய்ந்த ஒரு நன்னாளாகும்.

இந்த நாளன்று - 16.08.24 பகல் மணி 01.44 pm முதல் , 17.08.24 - 01.44 am வரை, மணிக்குள் - *இது விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்*. ( அதாவது, சூரியன் பெயர்ச்சி ஆகும் நேரத்திற்கு 6 மணி நேரம் முன்னும் பின்னும் உள்ள நேரத்தில்) .

இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில்
தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று 27 முறை கோவில் பிரகாரம் வலம் வந்த பின்னர் ஸ்ரீ மஹாவிஷ்ணு , ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் வழிபாடு செய்தால் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், ஐஸ்வர்யத்தையும் அள்ளி வழங்கும் ஒரு உன்னதமான திருநாளாக இந்த நாள் விளங்கும்.

மேலே குறிப்பிட்ட *விஷ்ணுபதி புண்ணிய கால நேரத்தில்* நமக்கு வசதிப்பட்ட நேரத்தில், கோவில் திறந்திருக்கும் நேரத்தில்
கொடிமரத்தையும், பெருமாள் சன்னதியையும் 27 பிரதக்ஷிணம் செய்து , பிறகு தாயார், பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும். இந்த விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு ஏகாதசி விரதத்தை விட அதிக பலன் தரக்கூடியதாகும்.

மேலும் அன்றைய நாளன்று சூரியன் வழிபாடு மேற்கொள்ளவும், முன்னோர்களுக்கு உண்டான திதி - தர்ப்பணம் கொடுக்கவும் அதனுடன் சேர்ந்து நம்மால் இயன்ற தான தர்மங்களும் செய்தால் அனைத்து விதமான விஷயங்களிலும் சாதகமான நிலை உண்டாக வழி பிறக்கும். மேலும் அன்றைய தினம் மாலையில் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்த நாள் இன்னமும் சிறப்பான நற்பலன்களை நிச்சயம் அளிக்கும்.

எனவே இந்த நாளன்று அனைவரும் தவறாது வழிபாடு மேற்கொண்டு மேன்மை அடைய, எல்லாம் வல்ல எமது குருமார்கள் அனைவரையும் மனமார பிரார்த்திக்கிறேன்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே.

*குரு வாழ்க! குருவே துணை!*

*சுபம்.. சுபம்... சுபம்...*

🙏ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் 🙏

🙏ஓம் நமோ நாராயணாய 🙏

🔯 அன்பார்ந்த ஆன்மீக அன்பர்களே,

🔯 *நிகழும் குரோதி ஆண்டு வைகாசி மாதம் 1ம் தேதி (17.08.2024) சனிக்கிழமை விஷ்ணுபதி புண்ணிய நாள்.*
*
🔯 அன்று அதிகாலை 1.30 முதல் முற்பகல் 10.30 வரை *விஷ்ணுபதி புண்ணிய காலம் .*

🔯 ஆதலால் அன்று *காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை* தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

✡️ அன்று பிரதோஷம் மற்றும் சனிக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

🔯

12/08/2024

*பஞ்சபூத மருத்துவம்*

1.நுரையீரல்>>>காற்று
2.கல்லீரல்>>>>>விண்
3.மண்ணீரல்>>>நிலம்
4.இருதயம்>>>> நெருப்பு
5.சிறுநீரகம்>>>நீர்
இந்த ராஜ உறுப்புகள் ஆற்றலை உள் இழுக்கும்

1.நுரையீரல் ஜோடி உறுப்பு>>>> பெருங்குடல்

2.கல்லீரல் ஜோடி உருப்பு>>>பித்தப்பை

3.மண்ணீரல் ஜோடி உறுப்பு>>>>இறப்பை

4.இருதயம் ஜோடி உறுப்பு>>>>சிறுகுடல்

5.சிறுநீரகம் ஜோடி உறுப்பு>>>>யூரினரி பிளாடர்

ராஜ உறுப்புகளின் ஜோடி உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும்.

1.கல்லீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு கண்.

2 மண்ணீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு வாய்.

3.நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு மூக்கு.

4.இருதயம் பாதிப்பு தெரிவிக்கக் கூடிய உருப்பு நாக்கு.

5.சிறுநீரகம் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு காது.

1.கல்லீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு புளிப்பு சுவை பிடிக்கும்.

2.மண்ணீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு இனிப்பு சுவை பிடிக்கும்.

3.நுரையீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு கார சுவை பிடிக்கும்.

4 இருதயம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு துவர்ப்பு கசப்பு சுவை பிடிக்கும்.

5.சிறுநீரகம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு உப்பு சுவை பிடிக்கும்.

அறுசுவையும் சமநிலையில் இருந்தால் ராஜ உறுப்புகள் சீராக இயங்கும். பற்றாக்குறையாக இருந்தாலும் இந்த ராஜ உறுப்புகள் நோயை உண்டாக்கும்.

1.கல்லீரலை பாதிக்கக்கூடிய உணர்வுகள் கோபம் டென்ஷன்

2.மண்ணீரலை பாதிக்கக் கூடிய உணர்வு கவலை. இந்த கவலைப்படுபவர்கள் பசி இல்லாமல் இருக்கும்போது சாப்பிடுவார்கள்.

3.நுரையீரலை பாதிக்கக் கூடிய உணர்வு துக்கம்.. வாழ்க்கையில் நடந்த எந்தவித செயலையும் துக்கத்தையும் கவலையும் வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புலம்பி கொள்வார்.

4.சிறுநீரகத்தை பாதிக்க கூடிய உணர்வு பயம்.

5.இருதயத்தை பாதிக்க கூடிய உணர்வு பெருமை பொறாமை.

இருதயத்திலிருந்து ஆற்றல் மண்ணீரலுக்கு செல்லும்.
மண்ணீரலிருந்து ஆற்றல் நுரையீரலுக்கு செல்லும்.
நுரையீரலிலிருந்து ஆற்றல் சிறுநீரகத்திற்கு செல்லும்.
சிறுநீரகத்திலிருந்து ஆற்றல் கல்லீரலுக்கு செல்லும். கல்லீரலிலிருந்து ஆற்றல் இருதயத்திற்கு செல்லும்.

நோய் தோன்றுவது மனதில்,
அது தேங்குவது உயிர் ஆற்றலில்,
அங்கிருந்து தான் உறுப்புகளுக்கு வெளியாகிறது
மனம்உயிர் உடல் என சரி செய்வது தான் பஞ்சபூத மருத்துவம்.

மனதை சரி செய்தால் உயிர் சரியாகும். உயிர் சரியானால் உறுப்புகள் சரியாகும் என்பது ஹோமியோபதி மருத்துவம்

உயிரையும் மனதையும் விட்டு
விட்டு உடலில் உள்ள உறுப்புகளுக்கு மற்றும் வைத்தியம் செய்வது ஆங்கில மருத்துவம் இதனால் பயனில்லை.

மருத்துவம் என்பது மனதை சரி செய்து அதன் மூலம் உயிரை சரி செய்து அதன் மூலம் உடலில் உள்ள உறுப்புகளை சரி செய்வதால் நோய் குணமாவது தான் மருத்துவம்.

*மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..!*

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்..குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்தப் சூழலுக்கு ஏற்ப படைத்திருக் கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன்
வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...

வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான்,
வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த
இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.

நோய்கள் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட்
இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..

ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.

விளைவு..?

தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு
கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம், அவற்றுக்கு உண்மையான
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார்
நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று
எதையோ குடித்து,
எதையோ புகைத்து, எதையோ மென்று
இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும்
அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.

காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்...

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன

பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.

விஷம் அவை..

இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும்
காணலாம்..

தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு
வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி
இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும்
நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிழிவு முதல் ஏகப்பட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல்
சிசேரியன் என மறுபுறம்.

மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என
ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது

இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை
மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது...
என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம்.

மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும்
ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

*அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து... இயற்கையை போற்றுவோம் - இனிமையான வாழ்வை பெறுவோம்*

12/08/2024

கல்லடைப்புக்கு அனுபவ மருந்து

தேவையான பொருட்கள்

சிலாசத்து - 50 கிராம்
வெங்காரம் - 50 கிராம்
வெடியுப்பு - 50 கிராம்
படிகாரம் - 50 கிராம்

மேலுள்ளவற்றை முறைப்படி சுத்தி செய்து வாழை தண்டு சாறு விட்டு நெகிழ அரைத்து வில்லை தட்டி காய வைத்து, காய்ந்ததும் அகலில் அடுக்கி சீலை செய்து புடமிட பற்பமாகும்.

அடுத்து
முள்ளங்கி சாற்றில் அரைத்து ஒரு புடம்.
அடுத்து தென்னகள்ளில் அரைத்து ஒரு புடம்.
பெருநெரிஞ்சில் சாற்றில் அரைத்து ஒரு புடம்.

புடமிட்டதை நெகிழ அரைத்து இளநீரில் கரைத்து காடா துணியில் வடிகட்டி சுண்ட வைத்து புட்டியில் அடைக்கவும்.

அளவு : 1/4 கிராம் முதல் 1/2 கிராம் வரை

அனுபானம் : இளநீர், மோர், வெண்ணை, நெய், முள்ளங்கி சாறு, வாழை தண்டு சாறு, நீர்முள்ளி குடிநீர், நெரிஞ்சில் குடிநீர், சிறுபீளை கசாயம், பிரச்சனைகளுக்கு தகுந்தாற்போல் அனுபானம் கொடுக்கவேண்டியது மருத்துவரின் கடமை

பயன்கள் : கல்லடைப்பு, சதையடைப்பு, உடல் சூடு, வெள்ளை , வெட்டை, குன்மம், வாத நீரினால் வரும் மூட்டு வீக்கம், நீர் சுருக்கு, கல்லடைப்புக்கு ஒரு வராதில் பலன் தெரியும். மேலும் பல பிரச்சனைகளுக்கு பலன் தரும் . . .

தக்க அனுபானம் மற்றும் துணை மருந்துகளோடு இந்த மருந்தை தர 5 நாளில் கல்லடைப்பு குணமாகும்.

மேலும் பயணிப்போம் . . .

நன்றி

12/08/2024

பின்னல் உறவைக் குறிக்கிறது.

முடியை விரித்துவிடுவது(free hair) அமங்கலமானது...
எவ்வுறவும் வேண்டாம் என்பதை குறிக்கிறது.

ஆகையினால்தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிரி கோலமாக செல்வர்.

அதன் பொருள் "என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு.
இனி எந்த உறவும் எனக்கில்லை" என்பதாகும்...

மேலும் தலை முடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது.

நல்ல / தீய உணர்வுகள் அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் (medium) போன்றது முடியின் நுனி...

மேலும் சந்நியாசிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்...

ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை... நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை...
என்பதை உணர்த்துவதற்காக...

ஆகையினால்தான் முற்காலத்தில் நுனிமுடி வெளியில் தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்ஜலம் கட்டிக் கொள்வர்...

ஆகையால் தலைவிரி கோலத்தை தவிர்ப்போம்.
இது உறவின் மீதான பிடிப்பை அறுக்க கூடியது.

பின்னல் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது.
மூன்று நதிகள் சேரும் போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு புலப்படுகின்றன.
ஒரு நதி (ஸரஸ்வதி) புலப்படுவதில்லை.

இதே போலவே பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.

பின்னலின்
வலது- பிறந்த வீடு
இடது-புகுந்த வீடு
நடுப்பகுதி-பெண்
தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும்.

ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவமாகும்.......

*இனிக்கும் அபூரவ் ஆடி பானு சப்தமி  நன்னாள் ஆயிரம் சூரிய கிரகணங்களுக்கு ஒப்பான நாள்  இன்று செய்யும் பூஜை வழிபாடு தானம் தர...
11/08/2024

*இனிக்கும் அபூரவ் ஆடி பானு சப்தமி நன்னாள் ஆயிரம் சூரிய கிரகணங்களுக்கு ஒப்பான நாள் இன்று செய்யும் பூஜை வழிபாடு தானம் தர்மம் எதுவாயினும் 1000 மடங்கு பலன் பானு சப்தமி ஞாயிறு வணக்கம் இன்று nanveg சாப்பிட வேண்டாம் சூரியன் அருள் முழுதும் கிடைக்க அன்புடன் செல்ஸ்*

Address

Bangalore
560103

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Telephone

9880290212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prahalyas Collections-Designer Boutique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prahalyas Collections-Designer Boutique:

Share