Swasti Global Express pvt ltd

Swasti Global Express pvt ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swasti Global Express pvt ltd, Apparel & Clothing, Voc Road (TNEB OPP), Kalanivasal, Karaikudi, Karaikkudi.

உதயநிலா சிலம்பம் அகாடமி நடத்திய 5 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா.காரைக்குடி பர்மா காலணியில் பொங்கல் விளையாட்டு விழா வ...
15/01/2025

உதயநிலா சிலம்பம் அகாடமி நடத்திய 5 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா.
காரைக்குடி பர்மா காலணியில் பொங்கல் விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்,பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள்,பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்ப நிகழ்ச்சிகள் இறுதியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.இவ்விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் உயர்திரு S.மாங்குடி MLA அவர்களும்,உயர்திரு T.பார்த்திபன் DSP அவர்களும், M.காளிதாஸ் சிறப்பு காவல் ஆய்வாளர் அவர்களும்.வருகைதந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இவ்விளையாட்டு விழாவை உடற்கல்வி இயக்குனர் சிலம்ப ஆசான் M.உதயகுமார் மற்றும் சிலம்ப ஆசான் M.சிவகுமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல்  கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராபர்ட் பொறுப்பேற்றுக் கொண்டார்., இவர் முன்னதாக தஞ்சாவூர...
30/12/2024

சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராபர்ட் பொறுப்பேற்றுக் கொண்டார்., இவர் முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

*சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணகி தெரு சூடாமணிபுரத்தில் உள்ள தனியார் கொரியர் அலுவலக வளாகத்திற்குள்  புகுந்த கொடிய...
18/12/2024

*சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணகி தெரு சூடாமணிபுரத்தில் உள்ள தனியார் கொரியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சுற்றி திரிந்துள்ளது உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த சில நிமிடங்களிலேயே விரைந்து வந்து பாம்பை லாபகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது*

*Voice of Karaikudi News செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு* : 8608939155 #📺வைரல் தகவல்🤩

👇👇👇
https://sharechat.com/post/076JOmw?d=n

01.12.2024 அன்று புது டில்லியில் நடைபெற்ற விவசாயம் மற்றும் புத்தொழிளுக்கான கிரிஷி ஜாகரான் மற்றும் மஹிந்திரா tractors இணை...
07/12/2024

01.12.2024 அன்று புது டில்லியில் நடைபெற்ற விவசாயம் மற்றும் புத்தொழிளுக்கான கிரிஷி ஜாகரான் மற்றும் மஹிந்திரா tractors இணைந்து நடத்திய Millionaire farmer of India (MFOI) விழாவில் இயற்க்கை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தியதற்காக சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் சேது குமணன் அவர்களுக்கு Millionaire farmer of India விருதினை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்களால் வழங்கப்பட்டது.

07/12/2024
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெத்தாலாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் நிஷாந்தினி என்ற சிறுமி தனது ...
07/12/2024

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெத்தாலாட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் நிஷாந்தினி என்ற சிறுமி தனது தந்தை ராம்குமார் உடன் நேற்று இருசக்க வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றபோது ராம்நகர் அருகே சாலையில் பணப்பைக் கிடப்பதை பார்த்து தன் தந்தையிடம் சொல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணப்பையில் கிடைத்த வங்கிப் புத்தகத்தின் அடிப்படையில் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு பணம் ஒப்படைக்கப்பட்டது. நிஷாந்தினி நேர்மையை பாராட்டும் வகையில் தேவகோட்டை உட்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் கவுதம் சிறுமி பயிலும் தலைமைஆசிரியரை மற்றும் மாணவி நிஷாந்தினியை நேரில் அழைத்து டிஎஸ்பி பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தேவகோட்டை மாவட்ட தொடக்கக் கல்வ...
07/12/2024

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தேவகோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில்குமரன் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்சி டெக்னோ பள்ளி . அமராவதிபுதூர் .டிசம்பர் மார்க்கெட்: டிசம்பர் -6 ,அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜ ராஜன் சிப...
06/12/2024

ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்சி டெக்னோ பள்ளி . அமராவதிபுதூர் .
டிசம்பர் மார்க்கெட்:

டிசம்பர் -6 ,அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்சி டெக்னோ பள்ளி , மாணவர்களுக்கான காய்கறி சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்படிப்பட்ட வாழ்க்கை திறன் செயல்பாடு (லைப்ஸ்கில்ஆக்டிவிட்டி) வருடா வருடம் இப்பள்ளி நடத்தி வருகிறது. இதன் முதன்மை நோக்கம் மாணவர்களுக்கு மனக்கணக்கு திறனை மேம்படுத்தவும் ,ஆங்கில பேச்சாற்றலை அதிகரிக்கவும், வியாபார யுக்திகளை கற்றுக் கொடுக்கவும் இப்பள்ளி நிர்வாகம் இவ்வாறான பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இப்பள்ளியின் முதல்வர் திருமதி.மெ. வடிவாம்பாள் மற்றும் ஆசிரியர்கள் பல புதுமையான முயற்சிகளை மாணவர்களிடையே எடுத்துச் செல்கின்றார்கள். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் திரு. முத்துக்குமார் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் .மேலும் பெற்றோர்கள் இவ்வாறான நிகழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்தை பாராட்டி நன்றி கூறினர்.

அம்பேத்கர் இளைஞர் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் சார்பாக காரைக்குடியில் இருக்கும் அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு சூரிய ஒளி ம...
06/12/2024

அம்பேத்கர் இளைஞர் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் சார்பாக காரைக்குடியில் இருக்கும் அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு சூரிய ஒளி முகப்பு விளக்கு பொருத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மேலஆவந்திப்பட்டி கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு நெப்புகொண்ட காளியம்மன...
06/12/2024

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மேலஆவந்திப்பட்டி கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு நெப்புகொண்ட காளியம்மன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது.சுற்றுப்புற பக்தர்கள் திரண்டு, அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மூன்று கரை கோவில் பங்காளிகள் ஊர்கிராம பொதுமக்கள் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

காரைக்குடி ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்ட பணிகளை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தனி ரயில் மூலம் பொது மேலாளர் தலைம...
30/11/2024

காரைக்குடி ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் திட்ட பணிகளை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தனி ரயில் மூலம் பொது மேலாளர் தலைமையில் அதிகாரிகள் வருகை.,அதிகாரிகளை காரைக்குடி வணிகர்கள் சங்கம் சார்பில் நம்பிக்கை இல்லை என்றால் மாலை மரியாதை செய்து வரவேற்போம் செய்யப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் நல்லாட்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவ...
25/11/2024

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் நல்லாட்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் அவர்களின் ஆலோசனை படியும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்களின் அறிவுறுத்தலின்படி செயல்படும் மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்கள் பேங்க் ஆப் பரோடா மூலம் புதியதாக வழங்கப்பட்ட வீடு தோறும் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் இந்த நிகழ்ச்சிக்கு மரியாதைக்குரிய துணை மேயர் அண்ணன் நா. குணசேகரன் அவர்கள் முன்னிலை பொறுப்பேற்றார்கள் பேங்க் ஆப் பரோடா பேங் ரீஜனல் மேனேஜர் அவர்கள் மற்றும் பேங்க் மேனேஜர் அவர்கள் உயர்திரு. சுகாதார அலுவலர் சுருளி நாதன் அவர்கள் மரியாதைக்குரிய மாமன்ற உறுப்பினர்கள் முகமது சித்திக் அவர்கள் கார்த்திகேயன் அவர்கள் மற்றும் பொறியாளர் ஒப்பந்ததாரர் செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டனர்

Address

Voc Road (TNEB OPP), Kalanivasal, Karaikudi
Karaikkudi
630001

Telephone

+919655168939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swasti Global Express pvt ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share