DEVI Textiles

DEVI Textiles Silk Sarees, ReadyMades

01/10/2020
24/10/2016
22/10/2016
22/09/2016

பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டம் : வியக்க வைக்கும் சலுகைகள்.!

ஆறு மாதங்களுக்கு வரம்பற்ற டேட்டா சேவைகளை வழங்குவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதன் படி பயனர்கள் ரூ.249/- மட்டும் செலுத்தி வரம்பற்ற இண்டர்நெட் டேட்டாவுடன், ஞாயிற்றுக் கிழமை மற்றும் இரவு நேரங்களில் இலவச அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.இந்தத் திட்டம் புதிய பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. இத்திட்டம் பிஎஸ்என்எல் சேவையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.249/- திட்டத்தில் பிஎஸ்என்எல் வழங்கும் முழு சேவை விவரங்களையும் இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

அன்-லிமிட்டெட்
ரூ.249/- திட்டத்தில் உண்மையில் வரம்பற்ற இண்டர்நெட் சேவையைப் பெற முடியும். இத்திட்டத்தின் அன்-லிமிட்டெட் பிரவுஸிங், அப்லோடிங், டவுன்லோடிங் மற்றும் இலவச அழைப்புகளும் அடங்கும்.

எல்லை
இத்திட்டத்தில் 1ஜிபி வரை இண்டர்நெட் வேகம் நொடிக்கு 2 எம்பி என்ற வாக்கில் கிடைக்கும். 1ஜிபி இண்டர்நெட் அளவைக் கடந்ததும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பியாகக் குறைக்கப்படும்.

மொத்த கட்டணம்
மாதம் ஒன்றிற்கு ரூ.249/- திட்டத்தை ஆக்டிவேட் செய்யும் போது 15 சதவீத சேவை வரி உட்பட மொத்த கட்டணம் ரூ.287 வரை இருக்கும்.

லேண்ட்லைன் அழைப்பு
பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டத்தில் அன்-லிமிட்டெட் லேண்ட்லைன் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இலவச அழைப்புகளையும், ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுக்க இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

கூடுதல் வாடகை
தொலைப்பேசி அழைப்புகளுக்குக் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ரூ.249/- செலுத்தும் போது இண்டர்நெட் மற்றும் அழைப்புக் கட்டணங்கள் இணைந்தே வழங்கப்படுகின்றது.

லேண்ட்லைன் கட்டணம்
பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டத்தில் பிஎஸ்என்எல் அழைப்பு ஒன்றிற்கு ரூ.1/- மற்றும் இதர நெட்வர்க் அழைப்புகளுக்கு ரூ.1.2/- என்ற வீதம் வசூலிக்கப்படுகின்றது. இந்தக் கட்டணங்கள் ஒரு நிமிடத்திற்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைக்ரேஷன் காலம்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.249/- திட்டமானது முதல் 180 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. இதன் பின் பிஎஸ்என்எல் ரூ.449 திட்டத்திற்குத் தானாக மாற்றப்படுவர். பயனர்கள் விரும்பினால் வேறு திட்டங்களையும் தேர்வு செய்து கொள்ள முடியும்.

ஃபைபர் நெட்வர்க்
பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டமானது ஃபைபர் நெட்வர்க்களில் வழங்கப்படுவதில்லை. FTTH நெட்வர்க் சேவைக்கான குறைந்த பட்ச மாத வாடகை ரூ.375/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பணம்
ரூ.249/- பிஎஸ்என்எல் திட்டத்துடன் சில வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத வாடகையுடன் லேண்ட்லைன் முன்பண கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகின்றது.

பிராட்பேண்ட் மோடெம்
பிஎஸ்எனல் ரூ.249/- திட்டத்துடன் பயனர்கள் எவ்வித பிராட்பேண்ட் மோடெம்களையும் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. மோடெம்களையும் வெளியில் நீங்களாகவும் வாங்க முடியும்.

சேவை
ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தும் பயனர்கள் இதற்கு முன் எவ்வித BB திட்டத்தையும் பயன்படுத்தவில்லை எனில் புதிய ரூ.249/- சேவையைப் பயன்படுத்த முடியும்.

22/09/2016

வாட்ஸ்ஆப்பில் பிளாக் செய்தால் இது தான் நடக்கும்.!!

ஸ்மார்ட்போன்களின் தவிர்க்க முடியாத குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கின்றது. நமது குறுந்தகவல் வழக்கத்தை முற்றிலும் மாற்றியிருக்கும் வாட்ஸ்ஆப் எந்நேரமும் நண்பர் மற்றும் உறவினர்களுடன் இணைந்திருக்க வழி செய்கின்றது. குறுந்தகவல்களுடன் சேர்த்து புகைப்படம், வீடியோ, தரவுகள் எனப் பல்வேறு இதரச் சேவைகளையும் வாட்ஸ்ஆப் வழங்குகின்றது.அதிகப்படியான சேவைகளை வழங்கும் சேவைகளில் சில சிக்கல்களும் இருக்கத் தானேச் செய்யும். வாட்ஸ்ஆப்பில் எந்நேரமும் எல்லோருக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியாது. அதுவும் நமக்குப் பிடிக்காதவர்களுக்கு பதில் அனுப்புவது பெரும்பாலும் கடுப்பாகவே இருக்கும். இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வாட்ஸ்ஆப் பிளாக் செய்யும் வசதியை வழங்கியது.சில காலமாக வாட்ஸ்ஆப் செயலியில் பெரும்பாலானோரும் பயன்படுத்தி வரும் பிளாக் செய்யும் அம்சம் குறித்து சில சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது. அதன்படி வாட்ஸ்ஆப் செயலியில் யாரையாவது பிளாக் செய்தால் என்னவாகும் என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்..

குறுந்தகவல்
நீங்கள் வாட்ஸ்ஆப்பில் யாரையேனும் பிளாக் செய்தால் அவர்கள் அனுப்பும் குறுந்தகவல் எதுவும் உங்களுக்கு வராது. குறிப்பிட்ட நபரை அன்-பிளாக் செய்தாலும், பிளாக் செய்யப்பட்ட காலகட்டத்தில் அவர் அனுப்பிய குறுந்தகவல்கள் உங்களுக்கு வராது.

லாஸ்ட் சீன்
நீங்கள் பிளாக் செய்த நபரால் நீங்கள் இறுதியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திய நேரத்தைக் காண்பிக்கும் லாஸ்ட் சீனை பார்க்க இயலாது.

ஸ்டேட்டஸ் தகவல்
லாஸ்ட் சீன் தகவல் போன்றே உங்களது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் என்ன என்பதையும் நீங்கள் பிளாக் செய்த நபரால் பார்க்க முடியாது. நீங்கள் குறிப்பிட்ட நபரை அன்-பிளாக் செய்த பின் உங்களது ஸ்டேட்ஸ் அவரால் பார்க்க முடியும்.

ப்ரோஃபைல் பிக்சர்
நீங்கள் பிளாக் செய்த காண்டாக்டின் வாட்ஸ்ஆப்பில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்திற்கான திரை காலியாகவே இருக்கும். நீங்கள் பிளாக் செய்த நபரால் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தினை பார்க்க முடியாது.

அழைப்பு
வாட்ஸ்ஆப்பில் நீங்கள் பிளாக் செய்தவரால் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியாது என்பது போல் அவரால் உங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் அழைப்புகளையும் மேற்கொள்ள முடியாது. குறிப்பிட்ட காண்டாக்டினை நீங்கள் அன்-பிளாக் செய்யும் வரை இது தொடரும்.

ரீட் ரிசீப்ட்ஸ்
நீங்கள் பிளாக் செய்தவரால் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியாது என்பதைப் போல் அவர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கான ப்ளூ டிக்ஸ் அல்லது ரீட் ரிசீப்ட்ஸ்களும் வராது.

க்ரூப் சாட்
நீங்கள் பிளாக் செய்தவரும் நீங்களும் ஒரே க்ரூப் சாட்டில் இருந்தால் குறிப்பிட்ட குறுந்தகவல்களை அவரால் அனுப்ப முடியும். தனிப்பட்ட குறுந்தகவல்களுக்கு தடைப்பட்டாலும் இது க்ரூப் சாட்களில் வேலை செய்யாது.

அனுப்புதல்
நீங்கள் பிளாக் செய்த காண்ட்களுக்கு உங்களால் குறுந்தகவல் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. நீங்கள் குறிப்பிட்ட காண்டாக்டினை அன்-பிளாக் செய்யும் வரை இது தொடரும்.

காண்டாக்ட்
நீங்கள் பிளாக் செய்த காண்டாக்ட் வாட்ஸ்ஆப்பில் அப்படியே தான் இருக்கும். குறிப்பிட்ட காண்டாக்டினை உங்களது போன்புக் அல்லது அட்ரெஸ் புக்கில் இருந்து நீக்கும் வரை அனைத்து காண்டாக்ட்களும் வாட்ஸ்ஆப்பில் தெரியும்.

கவனம்
வாட்ஸ்ஆப்பில் காண்டாக்ட்களை பிளாக் செய்வது உங்களின் தனிப்பட்ட உரிமையாகும். உங்கள் விருப்பம் போல் காண்டாக்ட்களை பிளாக் செய்ய முடியும். குறிப்பிட்ட காண்டாக்ட்களை அழுத்திப் பிடித்தால் அன்-பிளாக் செய்யும் ஆப்ஷன் கிடைக்கும்.

03/04/2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி நிறுவனங்கள் என மாவட்ட ஆட்சியர் பட்டியலிட்டுள்ள கல்லூரிகள்

ராயல்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்ஸ்டிடியூட்

கிங்ஸ் கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட்

இன்டஸ்ட்ரியல் ஸ்கூல்

அன்னை தெரசால் சாரிடபில் டிரஸ்ட்

எஸ்.கே.இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சைன்ஸ்

ரேமா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சைன்ஸ் எஜுகேசன்

ஸ்டார் இன்ஸ்டிடியூட்

நேசனல் இன்ஸ்டிடியூட்

மீரா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ்

பிரின்ஸ் இன்டஸ்ட்ரியல் ஸ்கூல்

சொர்ணா பாரா மெடிக்கல் டெக்னிகல் இன்ஸ்டிடியூட்

மேரி மாதா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ்

மதர் இந்தியா இன்ஸ்டிடியூட் பாரதிநகர் பரமக்குடி.

புளு ஸ்டார் இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரி & நர்சிங் & பயர் சேப்டி

நேசனல் இன்ஸ்டிடியூட்

மேரி மாதா இன்ஸ்டிடியூட்

நாகசிவா இன்ஸ்டிடியூட்

மதர் தெரசா இன்ஸ்டிடியூட்

மீரா இன்ஸ்டிடியூட்

மெல்வின் இன்ஸ்டிடியூட்

இந்திரா இன்ஸ்டிடியூட்

நேசனல் இன்ஸ்டிடியூட்

பயோனியர் ஸ்கூல் ஆப் நர்சிங்

Address

MAIN Road
Puduvayal
630108

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm

Telephone

9443214576

Website

Alerts

Be the first to know and let us send you an email when DEVI Textiles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share