26/03/2020
கட்டிட பொறியாளர்களின் விரலுக்கேற்ற வீக்கம்...
ஊரடங்கு அமலில் இருக்கும் இக்காலகட்டத்தில்
அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றியும்
கட்டுமான தொழிலாளர்கள் பற்றியும் மட்டும் பேசி கொண்டு இருக்கிறார்கள்..
அவர்கள் மட்டும் பதிக்கப்படுகிறார்களா என்ன..?.
தொடர்ந்து படியுங்கள்...
பொறியாளர்களின் நிலையை...
இதைப்படித்தால்
" கொரனோவும் " கண்ணீர் விடும்..
பல பொறியாளர்கள் கட்டுமான ஒப்பந்தம் எடுத்து, பாதியில் வேலைகள் நிற்பதால் கட்டிடம் கட்டுபவர்களிடம் இருந்து பணம் வாங்க முடியாமல் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும், கட்டுமான பொருட்கள் சப்ளை செய்பவர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்கள்.
ஒரு மேஸ்திரி, ஒப்பந்த வேலை இல்லை என்றால் கரண்டி பிடித்து வேலை செய்தால் இன்று ஒரு நாளைக்கு ரூபாய் ஆயிரம் வரை சம்பளமாக பெறுகின்றனர் .
ஆனால், கார், பைக், கட்டிய வீடு, அடமானம் வைத்த நகைகடன், என்று லோன் வாங்கியுள்ள ஒரு பொறியாளர் எப்படி அதற்கான மாத தவணையை கட்ட முடியும்..?
பல பெரிய பில்டர்கள் மற்றும் காண்ட்ராக்டர்களிடம் பணி புரியும் பல பொறியாளர்கள் உள்ளனர். ESI, PF என்று எதுவும் இல்லாமல் பனியிலும், வெயிலிக்கும், மழையிலும் இரவு பகல் பாராமல் கஷ்டப்படும் பல பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள் நிலை..?
பேண்ட், ஷர்ட், பூட்ஸ் போட்டால் என்னவோ பணக்காரர்கள் போலவும், கஷ்டமே படாதவர்கள் எனும் மனப்பான்மையுடன் மக்கள் பலர் பொறியாளர்களை நினைக்கிறார்கள்..
பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகட்ட கூட பொறியாளர்களு முன்பணம் கொடுப்பதில்லை...
அந்த பணம் கூட பொறியாளர்கள் தன் கை காசை போட்டுதான் வேலையை ஆரம்பிகிறார்கள்...
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்,
கட்டிடபணி முடிந்து வீட்டில் குடியேறிய பின்பு பொறியாளர்களு நியாயமாக கொடுக்க வேண்டிய Final Bill ஐ பலர் முழுமையாக செட்டில் செய்வதில்லை....
சனிக்கிழமைகளில் இருந்த பணத்தில்
தொழிலார்களுக்கு சம்பளம் போட்டு விட்டு, வெறும் கையோடு வீடு செல்லும் பல பொறியாளர்களை பார்த்துள்ளேன். நானும் அது போல் இருந்துள்ளேன்.
கட்டுமான தொழிலாளியிடமாவது அன்று வரை பார்த்த வேலைக்கு வாங்கிய சம்பளம் இருக்கும்,
ஆனால், அவர்களுக்கு சம்பளம் போட்ட பொறியாளர்களிடம்..??
மேலும், பொருளாதார மந்த நிலை காரணமாக, கட்டிட பணிகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பல பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள் நிலை பற்றி கவலை பட யாரும் இல்லை.
கட்டுமான தொழிலாளர்கள் படும் கஷ்டம் போல் தான், கட்டுமான பொறியாளர்களும்...
-கட்டிட பொறியாளன்... அபு