PK Collection

PK Collection ***YOUR PARTNER IN PERSONAL STYLE***
Find the newest styles of clothes with affordable prices.

15/04/2018

நடுநிலையாளர்கள் ரஜினியை ஏன் ஆதரிக்க வேண்டும்

விஜயகாந்த், ரஜினியைப் பற்றி சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம் மிகவும் கடுமையாக விமர்சித்து வந்து இருக்கிறார். நரசிம்மா என்ற மகா உன்னதமான காவியத்தில் , ரஜினியை விமர்சித்து இப்படி ஒரு வசனம் வைத்து இருப்பார். " நான் இப்போ, வருவேன், அப்போ வருவேன்னு பூச்சாண்டி காட்ட மாட்டேன். வரணும்னு முடிவு எடுத்தா உடனே வருவேன்". அந்த படம் அடைந்த இமாலய தோல்வி, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையின் முடிவிற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

அதன் பிறகு, நெய்வேலி போராட்டத்தின் போது, நெய்வேலில போராட்டம் பண்ணா தண்ணி வருமான்னு ஒருத்தர் கேட்குறாரு!!! உண்ணாவிரதம் இருந்தா மட்டும் தண்ணி வருமா?? அப்படி என்று பேசினார். அவர் அப்படி கூறியதும், அவர் பக்கத்தில் உள்ள குண்டு கல்யாணம் உள்ளிட்ட அல்லக்கைகள், ரஜினியை கிண்டல் செய்யும் விதத்தில் கைதட்டி குதூகலித்தனர். அப்பொழுது, விஜயகாந்த் மீது எனக்கு மிக பெரிய கோபம் ஏற்பட்டது.

அவர் 2005 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கிறார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அவருக்குதான் நான் வாக்களித்தேன். விஜயகாந்த் மீது எனக்கு கோபம் இருந்தாலும், அதனை விட பெரிய கோபம் திமுக மற்றும் அதிமுக அவர்களின் மீது தான். அவர்களை ஆட்சிக்கு வரவிட கூடாது என்கின்ற நியாயமான கோபம் எல்லாரையும் போல் எனக்கும் இருந்தது. அதனால், அவர் தலைவர் ரஜினியைப் பற்றி பேசியதை எல்லாம் மறந்து அவருக்கு வாக்கு அளித்தேன். எனக்கு அப்போதைய பெரிய தேவை மாற்றம் ஒன்று தான். விஜயகாந்தை பொறுத்தவரை நான் அப்பொழுது நடுநிலையாளன்தான். அதன் பிறகு அவர் செய்த கோமாளித்தனங்களைப் பார்த்து, அவருக்கு வாக்களிப்பதை நிறுத்தினேன்.

இதேபோல் தான் விஜயகாந்தை விட பலமடங்கு செல்வாக்கு பெற்ற ரஜினி தற்பொழுது கட்சி ஆரம்பிக்க இருக்கிறார். நடுநிலையாளர்கள் பலர் அவர்மீது சிற்சில விமர்சங்கள் வைக்கின்றனர். அதற்கு ரஜினி தரப்பில் இருந்தும், ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்தும் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறி கொள்வது ஒன்றே ஒன்று தான், நீங்கள் ரஜினியைப் பற்றி வைக்கும் விமர்சனங்கள் அனைத்திலும் துளி கூட உண்மை இல்லை. நீங்கள் அதனை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் ரஜினியின் மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான். இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீங்கள் மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

கண்டிப்பாக ரஜினியின் வாக்கு வங்கி என்பது திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று என்று முன்வைக்கின்ற மற்ற அரசியல்வாதிகளை விட மிக அதிகமாக இருக்கும். இதனை நாம் சென்ற தேர்தலில் கண்கூட பார்த்து இருக்கின்றோம். இனவெறி, ஜாதிவெறி கொண்ட அவர்களால் இன்னும் 10 ஜென்மம் எடுத்தாலும் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக நிச்சயமாக வர முடியாது. அதனால், நடுநிலையாளர்கள் அனைவரும் ரஜினிக்கு வாக்களித்து, ரஜினியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அப்படி நீங்கள் நினைத்த மாதிரி அவர் செயல்படவில்லையென்றால், அவரே மூன்று வருடங்களில், அவர் கூறியது போல் ராஜினாமா செய்வார். இல்லையென்றால், நீங்கள் அவரை ஓட்டு என்கின்ற ஆயுதத்தின் மூலம் மறுபடியும் நிராகரிக்கலாம். மாறாக, நீங்கள் இந்த முறை ரஜினிக்கு வாக்களிக்கத் தவறினால், இன்னும் 100 வருடங்களுக்கு திமுக மற்றும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கு.......

16/09/2017
Refer your friends and earn up to ₹2000 in a year!With our Refer a Friend Program, you get rewarded for bringing a frien...
10/09/2017

Refer your friends and earn up to ₹2000 in a year!
With our Refer a Friend Program, you get rewarded for bringing a friend or family member to PKCollection. The person you refer also gets a reward.

Come Celebrate with us
28/07/2017

Come Celebrate with us

Address

7A, Street Number 4, Chidambara Nagar
Thoothukudi
628008

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 10am - 10pm

Telephone

+919952556088

Website

Alerts

Be the first to know and let us send you an email when PK Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PK Collection:

Share